ADDED : செப் 03, 2026 02:19 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கைலாஷ்குமார் மற்றும் தர்ம புரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால் உள்ளிட்ட குழு-வினர், தர்மபுரி டவுன் பழைய புறநகர் பஸ் ஸ்டாண்டை சுற்றி-யுள்ள பகுதியில், நேற்று ஆய்வு செய்தனர்.
இதில், சிக்கன் கடைகளில், செயற்கை நிறமூட்டியை சேர்த்து வைத்திருந்த இறைச்சி மற்றும் சில்லி சிக்கன் என, 30 கிலோ அளவில் சிக்கனை பறிமுதல் செய்தனர். மேலும், சமைத்த மீன் மற்றும் கோழி இறைச்சி, மசாலா மற்றும் செயற்கை நிற கரைசல்-களை, பிரிட்ஜில் வைத்திருந்ததை பறிமுதல் செய்து அப்புறப்ப-டுத்தினர். இது போன்ற விதிமீறலில் ஈடுபட்ட, 5 ஓட்டல்களுக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
