விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வழிகாட்டு விதிமுறைகள் அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வழிகாட்டு விதிமுறைகள் அறிவிப்பு
ADDED : செப் 03, 2026 02:18 AM
தர்மபுரி: விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான, வழிகாட்டு விதிமுறைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் சரவணன் அறிவிப்பு வெளியிட்-டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டா-டும்போது, சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி, மாவட்ட நிர்-வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில், சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு சுற்றுச்சூ-ழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்-சுத்தன்மை இல்லாத இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தலாம்.
துவைத்து திரும்ப உபயோகிக்கக்கூடிய அலங்கார துணிகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தவும். பிரசாத வினியோகத்திற்கு மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்-ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும். பொறுப்புடன் குப்பை-களை பிரித்து அப்புறப்படுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும். எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தலாம்.
செய்யக்கூடாதவை
'பிளாஸ்டர் ஆப் பாரீஸ்' சிலைகளை பயன்படுத்தக்
கூடாது. சிலைகளை அலங்கரிப்பதற்கு, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ரசாயனப் பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்தக்கூடாது. ஒரு-முறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்ப-டுத்துவதை தவிர்க்க வேண்டும். அனுமதி இல்லாத நீர்நிலை-களில் சிலைகளை கரைக்கக்கூடாது. பிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
