/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.27 லட்சம் பறிமுதல்
/
உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.27 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.27 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.27 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 22, 2024 07:08 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி, ஆர்.எம்.ரோட்டிலுள்ள சோதனைச்சாவடியில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் மகேஸ்வரி தலைமையில், போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த நாச்சினாம்பட்டியை சேர்ந்த ஆடு வியாபாரி ரஜினி, 42, என்பவரின் பைக்கை சோதனை செய்ததில், அவர் உரிய ஆவணம் இன்றி, 70,800 ரூபாய் எடுத்து சென்றதை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, சாமியாபுரம் கூட்ரோட்டில் சேலம் நோக்கி சென்ற மினிலாரியை பாப்பிரெட்டிப்பட்டி உதவி பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், சோதனை செய்ததில், கல்லாத்துப்பட்டியை சேர்ந்த சேகர் என்பவரிடமிருந்து, 59,750 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்ட எல்லையான, மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் சோதனை சாவடியில், அரூர் கூட்டுறவு சார்பதிவாளர் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் பாக்கியம், அரூர் நோக்கி சென்ற காரை சோதனை செய்ததில் பறையபட்டி புதுாரை சேர்ந்த மோகன் என்பவரிடமிருந்து, 96,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். மொத்தம் பறிமுதலான, 2.27 லட்சம் ரூபாய், பாப்பிரெட்டிப்பட்டி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

