/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோட்டில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு
/
பாலக்கோட்டில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு
ADDED : அக் 07, 2024 03:11 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நேற்று மாலை, 4:00 மணிக்கு, ஆர்எஸ்.எஸ்., அணிவகுப்பு தொடங்கியது.
இதில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ், கோட்ட பொறுப்பாளர் சந்திரசேகர், ஓய்வுபெற்ற இந்தியன் வங்கி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரண்டஹள்ளி பச்சையம்மன் கோவில் நிறுவனர் கலைமணி, அணிவகுப்பை தொடங்கி வைத்தார். வாசவி மஹாலில் இருந்து துவங்கி அக்ரஹாரம், கல்கூடப்பட்டி மேல் தெரு, ஸ்துாபி மைதானம், பைபாஸ் ரோடு, தக்காளி மண்டி, எம்.ஜி.,ரோடு வழியாக, பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில், வட தமிழக, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி மனோகர் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தோற்றம், செயல்பாடு, சேவை பணிகள் குறித்து பேசினார். தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

