/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இடி, மின்னலின் போது மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க ஆர்.டி.ஓ., அறிவுறுத்தல்

ADDED : மே 24, 2024 07:03 AM
அரூர் : மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மழை வருவதற்கான அறிகுறி இருந்தால், குழந்தைகள் மற்றும் கால்நடைகள் பாதுகாப்பான இடங்களில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். வீட்டிலுள்ள 'ஏசி', பிரிட்ஜ், மின் அடுப்பு உள்ளிட்ட மின்சாதனங்களை உடனடியாக, அணைத்து விட வேண்டும். மொபைல்போன் சார்ஜர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். மழை பெய்யும்போது வெளியிலோ அல்லது வீட்டின் உள்ளேயோ குளிப்பதை தவிர்க்கலாம்.
இடி, மின்னலின் போது, மின் கம்பங்களின் அருகிலோ, மரங்களின் கீழேயோ, மலை உயரங்களிலோ இருப்பதை தவிர்க்க வேண்டும். அதே போல், சைக்கிள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளப்பெருக்கு உள்ள ஆபத்தான இடங்களில், 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.