/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தாட்கோ மானிய டிராக்டரில் முறைகேடு ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை குழு
/
தாட்கோ மானிய டிராக்டரில் முறைகேடு ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை குழு
தாட்கோ மானிய டிராக்டரில் முறைகேடு ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை குழு
தாட்கோ மானிய டிராக்டரில் முறைகேடு ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை குழு
ADDED : ஜூலை 22, 2025 02:06 AM
தர்மபுரி,தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஏரிமலை கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, வட்டுவனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ஏரிமலை இருளர் காலனியில் உள்ள, 15க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த எங்களுக்கு மானியத்துடன் கூடிய, தாட்கோ கடன் திட்டத்தில், டிராக்டர்கள் பெற்று தருவதாக, 4 மாதங்களுக்கு முன், தனியார் டிராக்டர் நிறுவன பிரதிநிதி ஒருவர் எங்களை அணுகி கையெழுத்து பெற்றார். அதன்பிறகு அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை.
ஆனால், டிராக்டர்களுக்கான ஆர்.சி., புக் மட்டும் எங்கள் வீட்டுக்கு தபால் மூலம் வந்தது. இதில், சம்மந்தப்பட்ட நபர் டிராக்டர்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாக தெரியவந்தது.
பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டுக்காக, அரசு செயல்படுத்தும் திட்டத்தில் மோசடி செய்து, டிராக்டர்களை பெற்று, வேறு நபர்களுக்கு விற்பனை செய்தவர் மற்றும் டிராக்டர்களை வாங்கியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.
மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சதீஸ், இது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி, 10 நாட்களுக்குள் அறிக்கை வழங்கும் படி, தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து, உத்தரவிட்டுள்ளார்.