/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல் வைப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல் வைப்பு
ADDED : மார் 27, 2024 04:15 PM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி லோக்சபா தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, நேற்று முன்தினம் முதல் அனுப்பப்பட்டு வருகின்றது. இதன்படி பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஓட்டுப்பதிவிற்காக, 76 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 376 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 408 வி.வி.பேட்., ஆகியவை அனுப்பப்பட்டு நேற்று அதிகாலை வந்தது.
இந்த இயந்திரங்கள் அனைத்தும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது, இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, இது தவிர, 24 மணி நேர பாதுகாப்புப் பணியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

