/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேலம் அரசு ஊழியர் மோசடி வழக்கில் கைது
/
சேலம் அரசு ஊழியர் மோசடி வழக்கில் கைது
ADDED : செப் 27, 2025 01:54 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பருவதனஹள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன், 42; இவரது மனைவி ரேவதி, மைத்துனர் விக்னேஷ், உறவினர்கள் சீதா, தமிழரசி ஆகியோருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும், ஓமலுார் தேசநாயக்கனம்பட்டி செந்தில்நாதன், 40; மற்றும் சேலம் மெய்யனுார் சந்தோஷ்குமார், 42, கூறியுள்ளனர்.
இதனால் சீனிவாசன் தனது வங்கி கணக்கிலிருந்து, 2025 ஜன., 8 முதல் பிப்., 3 வரை, 42.30 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால் நான்கு பேருக்கும் போலி நியமன ஆணையை அனுப்பி நம்ப வைத்துள்ளனர். இதுகுறித்து தர்மபுரி எஸ்.பி.,யிடம் சீனிவாசன் அளித்த புகார் படி, பென்னாகரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதில் சந்தோஷ்குமார் ஏற்கனவே வேறொரு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் செந்தில்நாதனை, பென்னாகரம் இன்ஸ்பெக்டர் குமர
வேல் பாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து, தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.