/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாதுகாப்பு உபகரணமின்றி துாய்மை பணியாளர்கள்
/
பாதுகாப்பு உபகரணமின்றி துாய்மை பணியாளர்கள்
ADDED : நவ 20, 2024 01:50 AM
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 20---
கடத்துார் பேரூராட்சியிலுள்ள, 15 வார்டுகளில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பேரூராட்சியில், 45 துாய்மை பணியாளர்கள், 10 டேங்க் ஆப்பரேட்டர்கள் பணியாற்றுகின்றனர்.
கழிவு நீர் கால்வாய், குப்பை அகற்றும் பணியில் ஈடுபடும்போது, இவர்
களுக்கு கையுறை, காலனி, மழைகோட், பாதுகாப்பு உபகரணங்கள் பேரூராட்சி நிர்வாகத்தால் வழங்க வேண்டும். ஆனால் இதை வழங்காததால், வெறுங்கைகளில்
குப்பையை அள்ளுகின்றனர்.
கழிவுநீர் கால்வாய், அழுகி துர்நாற்றம் வீசும் குப்பையை அள்ளும்போது, அதனால் நோய் கிருமிகள் உடலில் புகுந்து, துாய்மை பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். குப்பையை அள்ளும் போது, நகம், தோல் வழியாக
கிருமிகள் பரவுகிறது. இதனால் பல நோய்களுக்கு
ஆளாகின்றனர்.
எனவே, அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க, துாய்மை பணியாளர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.

