ADDED : மே 03, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி:ஆதிசங்கரர் ஜெயந்தி விழா, தர்மபுரி அருணாச்சல அய்யர் சத்திரத்தில் கடந்த, 25-ல் மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் விசேஷ பூஜைகளுடன் தொடங்கியது. பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள், சங்கீத சமர்ப்பணம் நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று, ஆதிசங்கரர் திருவீதி உலாவை தொடர்ந்து, ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா குழுவினர் செய்திருந்தனர்.