/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.பி., ஆபீசில் பா.ம.க., புகார் மனு
/
எஸ்.பி., ஆபீசில் பா.ம.க., புகார் மனு
ADDED : நவ 07, 2024 01:25 AM
எஸ்.பி., ஆபீசில் பா.ம.க., புகார் மனு
தர்மபுரி, நவ. 7-
தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி தலைமையில், அக்கட்சியினர் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடலுார் மாவட்டம், புவனகிரியில் நடந்த வி.சி., கட்சி ஆர்ப்பாட்டத்தில், வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, முன்னாள் எம்.பி., பாரிமோகன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, பா.ம.க., மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் உடன் சென்றனர்.