UPDATED : நவ 01, 2026 09:32 PM
ADDED : நவ 01, 2026 07:12 PM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அருகே, வீட்டில் மின்விளக்கை போட்டபோது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் கார்த்திக், 13, பலியானார்.
தர்மபுரி மாவட்டம் பி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன், 34; கூலி தொழிலாளி. இவரது மகன் கார்த்திக், அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். நேற்று (அக்.,31) மாலை, 6:20 மணியளவில் கார்த்திக், வீட்டில் மின்விளக்கை போட்டுள்ளார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டார். பெற்றோர் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பொம்மிடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
