/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : ஜன 08, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தர்மபுரி, :தேசிய அறிவியல் தினத்தையொட்டி, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை அமைப்பை சார்ந்த, மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். உணவு நலம், ஊட்டச்சத்து குறித்து, 7 ம் வகுப்பு மாணவி இன்பாஸ்ரீ விளக்கிய விதம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. ஒன்றிய அளவிலான கண்காட்சியில் முதலிடம் பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் தகுதி பெற உள்ளனர்.