sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி மாவட்டத்தில் சதமடிக்கும் வெயில்

/

தர்மபுரி மாவட்டத்தில் சதமடிக்கும் வெயில்

தர்மபுரி மாவட்டத்தில் சதமடிக்கும் வெயில்

தர்மபுரி மாவட்டத்தில் சதமடிக்கும் வெயில்


ADDED : மார் 16, 2024 01:30 AM

Google News

ADDED : மார் 16, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், தொடர்ந்து சதமடிக்கும் வெயிலால் விவசாயிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு பருவமழை ஏமாற்றியது. இதனால், பெரும்பாலான ஏரி, குளங்கள் வறண்டு காணப்பட்டது. சில ஏரி, குளங்களில் குறைந்தளவு தண்ணீர் இருந்தது. மாவட்டத்தில் பிப்., இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. மார்ச் தொடக்கத்தில் இருந்து, வெயிலின் அளவு, 90 பாரன்ஹீட்டுக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், ஏரி, குளங்களில் இருந்த தண்ணீர் வெகுவாக குறைந்ததுடன் வன பகுதிகளில் உள்ள மரங்கள் மட்டும் இன்றி, விவசாய நிலங்களிலும் தண்ணீர் இல்லாததால் தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் காய்ந்து வர தொடங்கியுள்ளது.இதனால், விவசாயம் மற்றும் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு வந்தன. கடந்த சில தினங்களாக வெயில் உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக வெயில் அளவு, 100.4 டிகிரி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us