/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுதானியங்களில் விதை உற்பத்தி மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி
/
சிறுதானியங்களில் விதை உற்பத்தி மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி
சிறுதானியங்களில் விதை உற்பத்தி மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி
சிறுதானியங்களில் விதை உற்பத்தி மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி
ADDED : டிச 20, 2024 01:11 AM
தர்மபுரி, டிச. 20-
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், நபார்டு வங்கி நிதி உதவியுடன் சிறு தானியங்களில் விதை உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்து, 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில், இருமத்துார், மொரப்பூர் ஆகிய ஊர்களில் நடந்த முகாமில், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, திட்டத்தின் நோக்கம், விதை உற்பத்தி, சிறு தானியங்களில் உள்ள ஊட்டச்சத்துகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இந்நிலைய மண்ணியல் துறை இணை பேராசிரியர் சங்கீதா சிறுதானிய சாகுபடி தொழில் நுட்பங்கள், மண் பரிசோதனை, உர பரிந்துரைகள் குறித்து விளக்கினார். நோயியல் துறை உதவி பேராசிரியர் தெய்வமணி, சிறு தானியங்களில் பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மை குறித்து எடுத்துரைத்தார்.
தோட்டக்கலை இணை பேராசிரியர் இந்துமதி சிறுதானியத்தின் மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். இறுதியில், நபார்டு வங்கி வளர்ச்சி மேலாண்மை உதவி பேராசிரியர் சோமசுந்தரம், வங்கியின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
இப்பயிற்சியில் சிறுதானியத்தை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.