/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விதை கரும்பு தட்டுப்பாடு: நடவு பணிகள் பாதிப்பு
/
விதை கரும்பு தட்டுப்பாடு: நடவு பணிகள் பாதிப்பு
ADDED : மார் 31, 2025 01:51 AM
அரூர்: அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் நடவு செய்த கரும்புகளை, அரவைக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் விதை கரும்பு தட்டுப்-பாட்டால், நடவு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரி-விக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாதது, வெட்டு ஆட்கள் பிரச்னை ஆகிய-வற்றால் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்தது. கடந்தாண்டு, 5,139 ஏக்கரில் மட்டுமே ஆலைக்கு கரும்பு பதிவு செய்யப்பட்டது. நடப்பாண்டு, நல்ல மழை பெய்ததால், கடந்த ஜன., முதலே கரும்பு நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், 10,000 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகு-படி செய்யப்பட்டுள்ளது. தற்போது, விதை கரும்பு கிடைக்கா-ததால், பல நுாறு ஏக்கரில் கரும்பு நடவு செய்யும் பணி பாதிக்கப்-பட்டுள்ளது. இதை தவிர்க்க, ஆலையில் மானிய விலையில் வழங்கப்படும் கரும்பு நாற்றுக்கள், விவசாயிகளுக்கு விரைவாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதே போல், கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது, வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகம் ஏற்றுக் கொள்வது மூலம், கரும்பு சாகுபடி பரப்பை மேலும் அதிகரிக்கலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.