/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய தடகள போட்டிகளில் சாதனை படைத்த செந்தில் பப்ளிக் பள்ளி மாணவியருக்கு பாராட்டு

ADDED : செப் 17, 2025 02:07 AM
தர்மபுரி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணா சியில், தேசிய அளவிலான தடகள போட்டிகள் கடந்த, 10 முதல், 13ம் தேதி வரை நடந்தது. அதில் சேலம், செந்தில் பப்ளிக் பள்ளியை சேர்ந்த மாணவியர் லக்ஷ்யா, சங்கநிதி ஆகியோர், தேசியளவில் சாதனை படைத்துள்ளனர். அவர்களை பாராட்டி, அவர்களை கவுரப்படுத்தும் வகையில் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
சி.பி.எஸ்.இ., கிளஸ்டர் -4 மாநில தடகள போட்டிகள் கடந்த ஜூலை மாதம், 18 முதல், 22ம் தேதி வரை, கரூரிலுள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது. அதில், இப்பள்ளி மாணவியர், 14 பேர், 8 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம், 25 பதக்கங்களைபெற்றதோடு, ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர். மேலும், 6 மாணவியர் தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர்.
தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு, பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் செந்தில் சி.கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதல்வர் டாக்டர் மனோகரன், துணை முதல்வர் நளினி, நிர்வாக அலுவலர் பிரவீன் குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவியரை பாராட்டினர். மேலும், மாணவியருக்கு பயிற்சியளித்த சுரேஷ், பார்த்திபன், பாரதி ஆகியோருக்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.