/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆடுகள் தொடர் திருட்டு; போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு
/
ஆடுகள் தொடர் திருட்டு; போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு
ஆடுகள் தொடர் திருட்டு; போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு
ஆடுகள் தொடர் திருட்டு; போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு
ADDED : ஏப் 29, 2024 07:36 AM
கம்பைநல்லுார் : கம்பைநல்லுார் பகுதியில் ஆடு திருட்டு குறித்து புகார் அளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் ரகுராமன், 37; இவருக்கு சொந்தமான, 7 ஆடுகளை கொட்டகையில் இருந்து கடந்த, 21ல் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவரது நாய் இறந்த நிலையில் கிடந்தது. அதேபோல் கடந்த, 27ல் இரவு கெலவள்ளியை சேர்ந்த சங்கீதா, 34, என்பவருக்கு சொந்தமான, 4 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கொட்டகை அருகில் சங்கீதாவின் நாய் இறந்து கிடந்தது. இவ்விரு சம்பவங்கள் குறித்து, கம்பைநல்லுார் போலீ சில் புகார் அளிக்கப்பட்ட போதிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. கம்பைநல்லுார் சுற்று வட்டாரப்பகுதியில், கடந்த, 6 மாதங்களாக ஆடு, மாடு மற்றும் மின்மோட்டார் கேபிள்களை மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த போதிலும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கின்றனர். இதனால், கால்நடை வளர்ப்போர் பீதியடைந்துள்ளனர். போலீசாரின் அலட்சியம் குறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம் மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து, கம்பைநல்லுார் இன்ஸ்பெக்டர் காளியப்பனிடம் கேட்டபோது, 'ஆடு திருட்டு குறித்து அளிக்கப்பட்ட புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.

