/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குப்பைக்கு தீ வைப்பு; புகையால் மூச்சுத்திணறல்
/
குப்பைக்கு தீ வைப்பு; புகையால் மூச்சுத்திணறல்
ADDED : செப் 09, 2024 07:06 AM
அரூர்: அரூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட வர்ணதீர்த்தம் பகுதியில், சுடுகாடு மேடு உள்ளது. கே.கே., நகர், பூந்தி மஹால் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை, சுடுகாடு மேடு பகுதியில் துாய்மை பணியாளர்கள் குவித்து வருகின்றனர். மேலும், குப்பை அதிகமாக சேரும்போது, அவற்றிற்கு தீ வைத்து விடுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் ரோட்டின் ஓரத்தில், குவித்து வருகின்றனர். 3 நாட்களுக்கு ஒரு முறை, குப்பைக்கு தீ வைத்து விடுகின்றனர். குப்பையில் உள்ள, தீ புகைந்து கொண்டே இருக்கும். இப்புகையால், இப்பகுதியிலுள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இங்கு குப்பை கொட்ட வேண்டாம் என பலமுறை கூறியும் டவுன் பஞ்., நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை' என்றனர்.