/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இருளப்பட்டி ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
/
இருளப்பட்டி ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
இருளப்பட்டி ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
இருளப்பட்டி ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : மே 28, 2025 01:40 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், இருளப்பட்டி ஊராட்சியில் நாகலுார், பீரங்கி நகர், காமராஜ் நகர், இருளப்பட்டி, இந்திரா காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இம்மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க, இருளப்பட்டியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் பீரங்கி நகர், இருளர் காலனி, இந்திரா நகர், இருளப்பட்டி பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. ஆனால் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:இருளப்பட்டியில் இருந்து ஒகேனக்கல் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த, 10 நாட்களாக மெயின் ரோட்டில் ஒகேனக்கல் குடிநீர் செல்லும் குழாய் உடைந்து விட்டது. இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.
கடந்த, 10 நாட்களாக சரிசெய்யப்படவில்லை. இதனால் குடிநீரின்றி மக்கள், நீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.