/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED : மே 11, 2025 01:46 AM
தர்மபுரி, தர்மபுரி டவுன் நெசவாளர் காலனியில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், தர்மபுரியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷ பூஜை நடந்தது.
இதே போல், அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது.