/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED : அக் 19, 2025 02:13 AM
தர்மபுரி: சனி பிரதோஷத்தையொட்டி, சிவன் கோவில்களில் சிறப்பு அபி-ஷேக, ஆராதனைகள் நேற்று நடந்தன.
தர்மபுரி அடுத்துள்ள, கடகத்துார் சோமேஸ்வரர் கோவில் பிரகா-ரத்திலுள்ள அதிகார நந்திக்கு, நேற்று சனி மஹா பிரதோஷத்தை-யொட்டி பால், இளநீர், சந்தனம், தேன், குங்குமம், மஞ்சள் உள்-ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், நெசவாளர் காலனியில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவில், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவனேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண-நாதர் கோவில், காரிமங்கலம் அபிதகுஜாம்பாள் ஆருண்ணேஸ்-வரர், அதியமான்கோட்டை சோமேஷ்வரர் மற்றும் சோளேஷ்-வரர், பி.எஸ்.அக்ரஹாரம் மரகதாம்பிகா சமேத ஸ்ரீமார்க சகாய ஈஸ்வரன், உட்பட மாவட்டத்தில் உள்ள, பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. * அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நந்திக்கு
பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்-தன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்-டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில், சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழி-பட்டனர்.