/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்
/
புகையிலை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்
ADDED : மே 17, 2025 01:44 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாகலுார் சாலை மற்றும் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள கடைகளில், ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நேற்று சோதனை செய்யப்பட்டது.
மொத்தம், 15 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு பெட்டிக்கடையில் மட்டும் புகையிலை பொருட்கள் விற்பது தெரிந்தது.அந்த கடையை மூடிய உணவு பாதுகாப்பு துறையினர், உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை கட்டிய பின் தான், கடையை திறக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மாநகராட்சி துப்புரவு அலுவலர் பிரபாகரன் உடனிருந்தார்.