/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.16.50 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
/
ரூ.16.50 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
ADDED : செப் 06, 2024 07:18 AM
தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், கடந்த, ஆக., மாதத்தில் மட்டும், 16.50 கோடி ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் ஏலம் போயின.
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். கடந்த ஆக., மாதத்தில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், 660 விவசாயிகள், 1,122 குவியல்களாக, 38.84 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 201 முதல், 611 ரூபாய் வரை சராசரியாக, 425 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 16.50 கோடி ரூபாய். கடந்த ஒரு மாதத்தில் நடந்த இந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால், 2.47 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.