/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வேலை வாய்ப்பிற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
/
வேலை வாய்ப்பிற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 11, 2024 06:22 AM
தர்மபுரி: தர்மபுரி அரசு பொறியியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு ஆங்-கில மொழித்திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்குரிய திறன்கள் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். துணை முதல்வர் செந்தில்குமார் மற்றும் அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத்-தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்-லுாரி முன்னாள் முதல்வர் அன்பரசி, பொறியியல் பயிலும் மாண-வர்களுக்கு ஆங்கில மொழித்திறன்களின் முக்கியத்துவம், ஆங்கி-லத்தில் சரளமாக உரையாட
ஏதுவாக, எளிய பயிற்சிகள் மேற்-கொள்வது, தங்களது கற்றல் திறன்களை மிகச்சிறப்பாக எடுத்து-ரைத்து, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறு-வது குறித்து பேசினார். மேலும், கல்லுாரியில் நடந்த பேச்சு, கவிதை, கட்டுரை போட்டி-களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இதில், இயந்திரவியல் துறைத்தலைவர் ராஜேஸ்வரி, பேராசிரி-யர்கள் சையது ஜாபர், பிரதீபா, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

