ADDED : ஜூலை 12, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் :தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆட்டையானூரை சேர்ந்தவர் வேடியப்பன், இவரது மனைவி கம்சலா, 70, நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சிவஞானம் என்பவரின், மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் நெற்றியில் காயமும், மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். எஸ்.பி., மகேஸ்வரன் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணிக்கு அரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த எஸ்.பி., மகேஸ்வரன், இரண்டாவது நாளாக கம்சலா கொலை குறித்து விசாரணை மேற்கொண்டார். அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன்
உடனிருந்தனர்.