/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.பி., வாகன சோதனை ஹெல்மெட் அணிய அறிவுரை
/
எஸ்.பி., வாகன சோதனை ஹெல்மெட் அணிய அறிவுரை
ADDED : ஜன 19, 2025 06:59 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும், வார இறுதி நாட்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், திருட்டு மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய, தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று, தர்மபுரி டவுன் டிராபிக் எஸ்.ஐ., சின்னசாமி தலைமையிலான போலீசார், கலெக்டர் ஆபீஸ், இலக்கியம்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடு-பட்டனர். அச்சமயத்தில், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்-வரன், இலக்கியம்பட்டியில் வாகன சோதனை நடத்தினார்.
இதில், 150 பைக்குகள், 50 இலகு ரக வாகனங்கள், 10 ஆட்-டோக்கள் என, 210 வாகனங்களை பிடித்து, சோதனை செய்தனர். ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்-டது. டூவீலரில் செல்வோர் ஹெல்மெட், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய, வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி., அறிவு-றுத்தினார்.