/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை
/
தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை
தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை
தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை
ADDED : ஏப் 21, 2025 07:58 AM
தர்மபுரி: ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்ப்பு பெற்ற ஈஸ்டர் பெருநாளை கொண்டாடும் வகையில், 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வந்தனர். கடந்த, 18 அன்று ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூரும் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஏசுவின் சிலுவைபாடுகள் தியானிக்கப்பட்டு, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
நேற்று, ஏசுவின் உயிர்ப்பை நினைவு கூரும் ஈஸ்டர் பெருநாள் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு பாரதிபுரத்திலுள்ள துாய இருதய ஆண்டவர் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.