/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாட்டு பொங்கலையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு
/
மாட்டு பொங்கலையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 16, 2025 07:17 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அன்னசாகரத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு, நேற்று கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில், ஊர்மக்கள் அனைவரும் தாங்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, வர்ணங்கள் பூசி, மாலை அணிவித்து, ஊர் மைய பகுதியிலுள்ள விநாயகர் கோவிலுக்கு முன் கொண்டு சென்று, சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, விநாயகர் கோவிலில் இருந்து, திரவுபதி அம்மன் கோவிலுக்கு கால்நடைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டு சென்று, தீபாராதனை காட்டி, தீர்த்தம் தெளித்தனர். இவ்வாறு கால்நடைகளை கோவிலில் வைத்து வழிபாடு செய்வதால், கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்படாது என்பது, அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதில், ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

