/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
ADDED : ஆக 01, 2025 01:44 AM
அரூர், அரூர் ஒன்றியம் பறையப்பட்டி புதுார் பஞ்.,க்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சின்னா, அரூர் தி.மு.க., தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தென்னரசு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதே போல், கம்பைநல்லுார் டவுன் பஞ்.,ல் முகாம் நடந்தது.* பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி.பள்ளிப்பட்டி சமுதாய கூடத்தில் பொம்மிடி மற்றும் பி.பள்ளிப்பட்டி ஊராட்சிகளுக்கு முகாம், மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை தலைமையில் நடந்தது. இதில், 2,100க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன. நிகழ்ச்சியில் தனி தாசில்தார் செல்வகுமார், ஜெயசெல்வன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.