/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வனத்துறையினருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
/
வனத்துறையினருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 01, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த மயிலாபூர் மலையடிவாரத்தில், 100க்கும் மேற்பட்ட மக்கள், காலங்காலமாக வசிக்கின்றனர். இப்பகுதியில் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வனத்துறையினர் அப்பகுதி விவசாய நிலங்களில் செடிகள் நட பொக்லைன் இயந்திரம் மூலம் கடந்த, 25ல் குழி தோண்டினர்.
அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையினரை முற்றுகையிட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் நிலம் அளவீடு செய்யாமல் சென்றனர். இந்நிலையில், நேற்று மீண்டும் நிலம் அளவீடு செய்தபோது, அப்பகுதி மக்களின் எதிர்ப்பால், நிலம் அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.