/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விநாயகர் சிலை கரைக்க 6 நீர் நிலைகளில் அனுமதி
/
விநாயகர் சிலை கரைக்க 6 நீர் நிலைகளில் அனுமதி
ADDED : ஆக 02, 2025 01:26 AM
தர்மபுரி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதலின்படி, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க, தர்மபுரி மாவட்டத்தில், 6 இடங்களில் அனுமதிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது, களிமண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால், செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
இதில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி, தர்மபுரி மாவட்டத்தில், வாணியாறு அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை, கேசர்குளி அணை, தென்பெண்ணையாறு, ஒகேனக்கல் உட்பட, 6 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.