/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: 12,874 மனுக்களுக்கு தீர்வு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: 12,874 மனுக்களுக்கு தீர்வு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: 12,874 மனுக்களுக்கு தீர்வு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: 12,874 மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஆக 25, 2025 02:54 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்-டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் கடந்த மாதம், 15 முதல் இம்மாதம், 22 வரை மொத்தம், 102 முகாம்கள் நடந்துள்ளன. இதில், 47,229 மனுக்-களும், கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக, 36,063 மனுக்-களும் வந்துள்ளன. இதுவரை, 12,874 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
நாளை (ஆக.26) கிருஷ்ணகிரி நகராட்சி வார்டு, 14, 21 பகுதிக-ளுக்கு பழையபேட்டை தர்மராஜா கோவில் தெரு முருகன் மகா-லிலும், மத்துார் சமுதாய கூடத்திலும், ஊத்தங்கரை ஒன்றியம் கீழ்-குப்பம், நொச்சிப்பட்டி பஞ்சாயத்துகளுக்கு, பனமரத்துப்பட்டி சமுதாய கூடத்திலும் நடக்கிறது. காவேரிப்பட்டணம் ஒன்-றியம் குண்டலப்பட்டி, கால்வேஅள்ளிக்கு குண்டலப்பட்டி சமு-தாய கூடம், பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம், பாலேபள்ளிக்கு கந்தி-குப்பம் துாய சேவியர் நடுநிலைப்பள்ளி, தளி ஒன்றியம் ஜவள-கிரி, அகலக்கோட்டை, செட்டிப்பள்ளிக்கு, ஜவளகிரி அரசு உயர்-நிலைப்பள்ளியில் முகாம்கள் நடக்க உள்ளன.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.