ADDED : ஜூலை 30, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம், பென்னாகரம் அடுத்த அளேபுரத்தில் கூத்தப்பாடி பஞ்.,க்கு உட்பட்டோருக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. முகாமை பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி பார்வையிட்டார்.
இதில், அரசின், 15 துறைகளின் கீழ், 46 சேவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்சிக்கு, தர்மபுரி மாவட்ட உதவி ஆணையர் நர்மதா தலைமை வகித்தார். பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்திரம், பி.டி.ஓ.,க்கள் சத்திவேல், லோகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., இன்பசேகரன், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.