/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாநில அளவிலான ஓட்டப்பந்தய போட்டி
/
மாநில அளவிலான ஓட்டப்பந்தய போட்டி
ADDED : ஜன 05, 2026 07:18 AM
தர்மபுரி: மாநில அளவிலான திறந்தவெளி ஓட்டப்பந்தய போட்டி, தர்மபுரி மாவட்ட விளை-யாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரி-சுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாநில அளவிலான திறந்தவெளி ஓட்டப்பந்தய போட்டி தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், 16, 18, 20 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்கள், 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக, 6 பிரிவு-களில் போட்டிகள் நடந்தது.
தர்மபுரி மாவட்ட தடகள சங்க தலைவர் சர-வணன், செயலாளர் அறிவு, இணை செயலாளர் அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் ராஜேந்-திரன், 10 கி.மீ., துார ஓட்டப்பந்தய போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் சேர்மேன் லதா, 8 கி.மீ., ஓட்டப்-பந்தய போட்டி உட்பட, 6, 4, 2 கி.மீ., ஆண்கள் மற்றும் பெண்கள் கலப்பு ஓட்டபந்தய போட்டிகள் நடத்தபட்டது. இதில், வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்-பட்டன.

