ADDED : செப் 09, 2024 07:06 AM
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று நடந்த, மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில், 150 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி, தமிழ்நாடு அமெச்சூர் மல்லர் கம்பம் சங்கம், தர்மபுரி மாவட்ட மல்லர் கம்பம் சங்கம் சார்பில், மாநில அளவிலான, மல்லர் கம்பம் போட்டிகள் நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. அமெச்சூர் மல்லர் கம்பம் சங்க நிறுவனர் பிரகாஷ் தலைமை வகித்தார். பா.ம.க., முன்னாள் எம்.பி., செந்தில் துவக்கி வைத்தார்.
இதில், தர்மபுரி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி உட்பட, 13 மாவட்டங்களில் இருந்து, 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒரு மாவட்டத்திற்கு, 6 வீரர்கள், 6 வீராங்கனைகள் என வீரர்கள் நிலை மல்லர் கம்பம் போட்டியிலும், வீராங்கனைகள் கயிறு மல்லர் கம்பம் போட்டியில் குழு மற்றும் தனி நபர்களாக பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதங்கம், கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அமெச்சூர் மல்லர் கம்பம் சங்க பொருளாளர் முருகன், தர்மபுரி மாவட்ட மல்லர் கம்பம் சங்க செயலாளர் சண்முகம் மற்றும் குழுவினர் ஒருங்கிணைத்தனர்.