/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கலை கல்லுாரியில் 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி
/
அரசு கலை கல்லுாரியில் 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி
ADDED : செப் 13, 2024 07:05 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி நடந்தது. அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் குமார் (பொறுப்பு) தலைமை வகித்தார்.
டி.ஆர்.ஓ., பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், தர்மபுரி மாவட்ட முன்னோடி வங்கி ராமஜெயம் ஆகியோர் பேசினர். இதில், 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.

