ADDED : அக் 14, 2026 05:04 AM
கம்பைநல்லுார்:தர்மபுரி
மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த காடையாம்பட்டியை சேர்ந்தவர்
சீனிவாசன், 49, விவசாயி. இவர், நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு
அவரது விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விட சென்றார்.
அப்போது, கிணற்றிலிருந்து சத்தம் கேட்டதை அடுத்து, உள்ளே எட்டிப்
பார்த்துள்ளார். அங்கு, மின் ஒயர்கள் அறுந்த நிலையில், வாலிபர் ஒருவர்
இருந்துள்ளார்.இது குறித்து சீனிவாசன் அளித்த தகவலின் படி, சம்பவ
இடம் வந்த கம்பைநல்லுார் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர்
கிணற்றில் இருந்து வாலிபரை மீட்டனர். தொடர்ந்து, வாலிபரிடம் போலீசார்
விசாரித்ததில், அவர் உச்சம்பட்டியை சேர்ந்த சிவன், 20, என்பதும்,
மின்ஒயர்களை திருடி விட்டு, கிணற்றில் இருந்து மேலே வரமுடியாமல்
தவித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சிவனை போலீசார் கைது செய்தனர்.
