ADDED : அக் 14, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
நல்லம்பள்ளி:தர்மபுரி
மாவட்டம், தொப்பூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், 75. இவர் சொந்தமாக
ரைஸ் மில் வைத்து தொழில் செய்து வந்தார்.
இவருக்கு உடல்நிலை பாதிப்பு
இருந்து வந்ததால், அதற்காக தர்மபுரியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று
மதியம், 12:55 மணிக்கு தொப்பூர் ரயில் ஸ்டேஷன் அருகே, சண்முகம்
தண்டவாளத்தை கடந்து சென்றபோது அவ்வழியாக வந்த பெங்களுரு -
காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே
பலியானார். தர்மபுரி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
