/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விளையாட்டு மைதானத்தில் தெருநாய்கள்: வீரர்கள் பீதி
/
விளையாட்டு மைதானத்தில் தெருநாய்கள்: வீரர்கள் பீதி
ADDED : நவ 02, 2024 01:12 AM
தர்மபுரி, நவ.2-
தர்மபுரி மாவட்ட விளையாட்டரங்கில் சுற்றித்திரியும் தெரு நாய்களால், இங்கு வரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடைபயிற்சி, ஓட்டம் என உடற்பயிற்சி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வாலிபால், கால்பந்து, ஸ்கேட்டிங், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்க வீரர்களும் இங்கு விளையாட வந்து செல்கின்றனர்.
முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற இந்த மாவட்ட விளையாட்டரங்கிற்கு வந்து செல்கின்றனர். மேலும், இந்த விளையாட்டரங்கில் உள்ள விடுதி மாணவியர், 70க்கும் மேற்பட்டோர் காலை மற்றும் மாலை நேரத்தில் கபடி பயற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், அருகில் உள்ள தெருக்களில் சுற்றித்திரியும் வெறிநாய்கள், விளையாட்டு மைதானத்துக்குள் நுழைந்து, வீரர்களை துரத்துகிறது.
இதனால், மைதானத்துக்கு பயிற்சி பெறவரும் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயற்சி மேற்கொள்கின்றனர். இவர்களின் நலன்கருதி, விளையாட்டு மைதானத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.

