/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தெரு நாய்கள் தொல்லை: கட்டுப்படுத்த கோரிக்கை
/
தெரு நாய்கள் தொல்லை: கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : செப் 10, 2025 01:33 AM
பாப்பிரெட்டிப்பட்டி, மெணசியில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மெணசியில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள, கடை வீதி, பொம்மிடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருக்களில் கூட்டமாக சுற்றும் தெரு நாய்களால், அப்பகுதி மக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர்.
தெருக்களில் வாகனங்களில் செல்வோரை, நாய்கள் துரத்துவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஊராட்சியில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது. எனவே, மெணசியில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.