/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
/
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
ADDED : மே 31, 2025 06:50 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை கல்லுாரி முதல்வர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லூரியில், 2025-26ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு ஜூன், 2ல் துவங்கி, 15 வரை நடக்கிறது. 2ம் தேதி சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், அந்தமான் நிக்கோபாரை சேர்ந்த மாணவர்கள், என்.சி.சி., மாணவர்கள், பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகள், விதவைகள், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும், 3ம் தேதி விடுபட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
வரும், 5ல் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 6ம் தேதி முதல், 14 வரை அனைத்து பாட பிரிவுகளில் விடுபட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் விண்ணப்ப படிவம், டி.சி., பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி, வருவாய் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், அசல் மற்றும் நகல்களுடன், 6 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன், பெற்றோரை அழைத்து வர வேண்டும். சேர்க்கை பெற்ற மாணவர்கள் சேர்க்கைக்கான கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.