/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விஷமருந்தி மாணவி தற்கொலை மற்றொருவர் தற்கொலை முயற்சி
/
விஷமருந்தி மாணவி தற்கொலை மற்றொருவர் தற்கொலை முயற்சி
விஷமருந்தி மாணவி தற்கொலை மற்றொருவர் தற்கொலை முயற்சி
விஷமருந்தி மாணவி தற்கொலை மற்றொருவர் தற்கொலை முயற்சி
ADDED : ஆக 05, 2025 05:52 AM
அரூர்:விஷம் குடித்த பிளஸ் 2 மாணவி இறந்த அதே நாளில், மற்றொரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது, அரசு மகளிர் பள்ளியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புறாக்கல் உட்டையைச் சேர்ந்தவர் தனுஸ்ரீ, 17; அரூர் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 2 கணிதப்பிரிவு மாணவி.
கடந்த, 28ம் தேதி மாலை வீட்டில் இருந்தபோது பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தார். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை இறந்தார்.
இந்நிலையில், அதே பள்ளியில் கொளகம்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி, 17, பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்து வருகிறார். நேற்று காலை, 8:15 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவி, வளாகத்தில் மயங்கி விழுந்தார். அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அரூர் போலீசார் விசாரணையில், சொறி, சிரங்குக்கு தோலில் பூசும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஷம் குடித்த மாணவி இறந்த அதே நாளில், மற்றொரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது, பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

