/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தலைவலிக்கு மாத்திரை சாப்பிட்ட மாணவன் மூச்சு திணறலால் சாவு
/
தலைவலிக்கு மாத்திரை சாப்பிட்ட மாணவன் மூச்சு திணறலால் சாவு
தலைவலிக்கு மாத்திரை சாப்பிட்ட மாணவன் மூச்சு திணறலால் சாவு
தலைவலிக்கு மாத்திரை சாப்பிட்ட மாணவன் மூச்சு திணறலால் சாவு
ADDED : ஆக 11, 2025 08:26 AM
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை, மிடுதேப்பள்ளியை சேர்ந்தவர் தியாகராஜ், 12; அரசு மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன். கடந்த, 8ம் தேதி காலை தலைவலி இருந்ததால் பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர் மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரை வாங்கி கொடுத்தனர். அதை சாப்பிட்டு தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில், மூக்கு வழியாக சளி அதிகம் வந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பிறகு வீட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் வழியிலேயே மாணவன் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.