ADDED : அக் 06, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர், 23 வயது மருத்துவ மாணவி. இவர், ஈரோடு தனியார் கல்லுாரியில், 5ம் ஆண்டு ஓமியோபதி மருத்துவம் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் வீட்டில், 'டிவி' பார்த்து கொண்டிருந்தவர் அப்படியே துாங்கி விட்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த, 17 வயதுள்ள, 2ம் ஆண்டு தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவன், அம்மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்தார். மாணவி சத்தம் போடவே அங்கிருந்து தப்பினான். புகார் படி ஏ.பள்ளிப்பட்டி போலீசார் மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
