sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கல்விக்கடன் வழங்கும் விழா மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

/

கல்விக்கடன் வழங்கும் விழா மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

கல்விக்கடன் வழங்கும் விழா மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

கல்விக்கடன் வழங்கும் விழா மாணவர்கள் பங்கேற்க அழைப்பு


ADDED : பிப் 13, 2024 11:10 AM

Google News

ADDED : பிப் 13, 2024 11:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில், கல்விக்கடன் வழங்கும் வழிகாட்டுதல் விழா நடக்கிறது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நாளை மறுநாள் (பிப்.15) காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை கல்விக்கடன் வழங்கும் வழிகாட்டுதல் விழா நடக்க உள்ளது. இதில், அனைத்து துறை அரசு அதிகாரிகள், கல்லுாரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, கல்விக்கடன் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். இந்த கல்விக்கடன், தற்போது உயர்நிலைப்பள்ளி, கல்லுாரியில் படிக்கும் இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் முதுகலை, முதுநிலை அறிவியல் சார்ந்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் பிறந்து, வெளிமாவட்டம் மற்றும் மாநிலத்தில் பயிலும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், www.vidyalakshmi.co.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, அருகிலுள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்ய ஆதார் மற்றும் பான் கார்டு, போட்டோ, பள்ளி, கல்லுாரி மாற்றுச் சான்றிதழ், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், நன்னடத்தை சான்றிதழ், வருமானம், இருப்பிடம் மற்றும் ஜாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, ஒட்டப்பட்டி, தர்மபுரி, என்ற அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 89255 33940, 89855 33941, 04342 230892 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆர்வமுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெற்றோர், கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் விழாவில் பங்கேற்கலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us