sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள்

/

அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள்

அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள்

அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள்


ADDED : ஜன 07, 2025 01:14 AM

Google News

ADDED : ஜன 07, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள்இண்டூர்: தர்மபுரி மாவட்டம், சோகத்துார் பஞ்.,க்கு உட்பட்ட ஆட்டுக்காரன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 138 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

கடந்த, 6 மாதத்திற்கு முன், பணியில் இருந்த, 4 ஆசிரியர்கள் பள்ளியில் சரிவர பணி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், 4 ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய, சி.இ.ஓ.,விடம் பெற்றோர் புகார் மனு அளித்தனர்.

குற்றச்சாட்டு எழுந்த, 4 ஆசிரியர்கள் உட்பட, 7 ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இதில், 3 ஆசிரியர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தென்றல், வட்டார கல்வி அலுவலர் ஜீவா ஆகியோர், பெற்றோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வார காலத்திற்குள், 3 ஆசிரியர்களை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்துவதாக உறுதியளித்தனர்.

அதை தொடர்ந்து, நேற்று முதல், மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதில், 2 நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us