/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்
/
சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்
ADDED : பிப் 11, 2025 07:19 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், 88ம் ஆண்டு தைபூச திருவிழா கடந்த, 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையடுத்து, தினமும், மயில்வாகம், ரிஷப வாகனம், சேஷ வாக-னத்தில் சுவாமி ஊர்வலம் நடந்து வந்த
நிலையில் நேற்று முன்-தினம் மாலை, சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்-தது.
இதையொட்டி சிறப்பு யாகம் நடத்தி, மாலை மாற்றி, மந்தி-ரங்கள் ஓத வள்ளி, தெய்வானை சமேத
சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள்
பங்கேற்றனர். அனைவருக்கும் தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டன. நேற்று, யானை வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரம-ணிய சுவாமி நகர் வலம் வந்து
பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று, தைப்பூச திருவிழாவும், நாளை, கேடய உற்சவம், குதிரை
வாகனம், சயன உற்சவம் ஆகியவை நடக்க உள்ளது.

