ADDED : ஆக 28, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூரிலுள்ள அலசநத்தம் பிரிவு ரோட்டிற்கு சற்று முன்பாக, தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், நேற்று மாலை திடீரென, 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பேரி கார்டு வைத்து, வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க போலீசார் ஏற்பாடுகளை செய்தனர். சாலைக்கு அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கசிவு ஏற்பட்டு மண் அரிப்பால், பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை விசாரிக்கின்றனர்.