சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
ADDED : நவ 17, 2026 05:14 AM
பாலக்கோடு; பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக இயக்க வலியுறுத்தி, தொழிலாளர்கள் நுழைவு வாயில் அருகே, நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த ஆலை ஒரு வருடத்திற்கு, 4 லட்சம் டன் கரும்பை தொடர்ந்து, 9 மாதங்கள் அரவை செய்து சாதனை படைத்தது. நாளடைவில் இதன் செயல்திறன் படிப்படியாக குறைந்து வருடத்திற்கு, 50,000 டன் கரும்பு கூட அரவை செய்ய முடியாமல், பெயரளவிற்கு ஓரிரு நாள் மட்டும் அரவைக்கு பின், தொடங்கிய வேகத்தில் மூடப்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலையை நம்பி தொழிலாளர்கள், விவசாயிகள் லாரி டிரைவர்கள் என, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரிகள், ஆலைக்கு தேவையான கரும்பை, விவசாயி
களிடம் பதிவு செய்வதில்லை, விவசாயிகளுக்கு விதை கரும்பு களை வழங்குவதில்லை. கொள்முதல் செய்யும் கரும்பிற்கான பணத்தை உரிய காலத்தில் வழங்குவதில்லை. விவசாயி கள் விளைவித்த கரும்பை, 10 மாதத்தில் அறுவடை செய்யாமல், பூ பூத்து கரும்பு காய்ந்த பின்னரே கொள்முதல் செய்வதால் கருப்பு எடை குறைந்து விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். எனவே, விவசாயிகள் பாதிப்பதை தடுக்கவும், தொழிலாளர்கள் நலன் கருதி, குறித்த நேரத்தில் ஆலையை இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
